லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கையூட்டை உடைத்து ஊழலை ஒழி கலாம் சட்ட இயக்கத்தில் இணைந்திடுவீர்
நம் நாட்டின் பொருளாதாரம், அரசியல், சமூக முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் தடைகளில் ஒன்றாக ஊழல் இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் துறையில் உள்ள அனைவரும் ஊழலை அகற்ற ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எல்லா நேரங்களிலும் நாணயம், நேர்மை ஆகியவற்றின் உயர்ந்த தரத்தைக் கடைப்பிடிப்பது என உறுதியேற்பதுடன், அது குறித்து விழிப்புணர்வுடனும் இருப்பதோடு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்க வேண்டும் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.
எனவே, கீழ்கண்டவிஷயங்கள் குறித்து நான் உறுதி ஏற்கிறேன். வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் நேர்மையையும், சட்டத்தின் ஆட்சியையும் பின்பற்றுவேன் எந்த சூழ்நிலையிலும் எவருக்கும் லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டேன். எமது கடமைகள் அனைத்தையும் நேர்மையாகவும், வெளிப்படையான வகையிலும் நிறைவேற்றுவேன். பொது நலனுக்கு உகந்த வகையில் செயல்படுவேன். தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் முன்னுதாரணமாக விளங்குவேன். எந்தவொரு ஊழல் நிகழ்வையும் அது தொடர்பான அமைப்பிற்குத் தெரிவிப்பேன்.
01
நிறுவனர் & தலைவர்
அரசு சட்ட விதியின் படி 2025 ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி முறைப்படி 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் (தமிழ்நாடு சட்டம் 27/1975) கலாம் சட்ட இயக்கம் தொடங்கிது. இயக்கமாய் இணைவோம் !!! இயன்றதை செய்வோம் !!!
02
செயலாளர்
எங்கள் முக்கிய குறிக்கோள் லஞ்சம், ஊழல் எதிப்பு, சட்ட விழிப்புணர்வு, சமூக விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு, அரசு நிர்வாக நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு மற்றும் அரசு நிர்வாக விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதே. கலாம் சட்ட இயக்கத்தில் இணைந்திடுவீர்.
03
பொருளாளர்
ஊழல் ஒழிப்பு / லஞ்ச லாவன்யம் இல்லாத நிர்வாகம் வெளிப்படையான மக்களுக்கான விவசாயிகளுக்கான தொழிலாளர்களுக்கான அரசு நிர்வாகம் அமையவும், சட்ட விழிப்பணர்வு பெற்ற சமுதாயம் அமையவும் கலாம் சட்ட இயக்கம் செயல்படும்.
கலாம் சட்ட இயக்கம் ஊழல் எதிர்ப்புப் பணியின் முதன்மையான கவனம் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதாகும்...








